மக்களுக்கு சேவை செய்ய வந்த விவசாயி

மக்களுக்கு சேவை செய்ய வந்த விவசாயி.    


" alt="" aria-hidden="true" /> 


வேலூர் மாவட்டம் வடுகன்தாங்கல் விக்ரம் மாசிமேட்டில் வசிப்பவர்  மார்க்கபந்து இவர் ஒரு விவசாயி தோட்டத்தில் விளையும் காய்கறிகளை உழவர் சந்தைகளுக்கு எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தார் .அவருக்கு இரு மகன்கள் இருவரும் ராணுவத்தில் பணி புரிகிறார்கள் அதில் மூத்த பையன் பெயர் திரு. கோவிந்தராஜ் ராணுவ வீரர்   கொரோனோ வைரஸ் பரவுவதைத் தடுக்க144 தடையால் உண்ண உணவில்லாமல் தவித்து வந்த மக்களுக்கு  ராணுவ வீரர் திரு .கோவிந்தராஜ் அவர்கள் சமூக வலைதளங்களில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் தொழிற் சங்கம்  பற்றி கேள்விப்பட்டு வேலூர் மாவட்ட செயலாளரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் பணியின் காரணமாக காஷ்மீரில் உள்ளேன் என்னால் இந்த பசியினால் வாடும் மக்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியலையே என்ற வருத்தப்பட்டு .என் தந்தையை திரு. மார்கபந்து அவர்களை அணுகுங்கள் அவர் தோட்டத்தில் விளையும் சுரக்காய் 75 காய்களை ஒரு பையில் போட்டுக் கொடுத்தார். அது மட்டுமில்லாமல் தன் வீட்டுக்காக வைத்திருந்த 50 கிலோ அரிசியும் தந்தார். ஒரு விவசாயி தோட்டத்தில் விளையும் காய்கறிகளை சந்தையில் விற்று சாப்பிடும் ஏழை சமூக ஆர்வலர்கள் ஆக முன்வருகிறார்கள். அவர் கொடுத்த அந்த அரிசி மற்றும் காய்கறிகள் அப்பகுதியில் வாழும்  ராஜபாளையம் மக்களுக்கும் விக்கிரம் மாசி மேடு வாழும் மக்களுக்கு இன்று வழங்கப்பட்டது சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் கே. வி குப்பம் ஒன்றிய துணை செயலாளர் அரவிந்தன்  சுப்பிரமணியன் . பிரபு மற்றும் மற்றும் பலர் உடன் இருந்தனர்.